Ponzi
scheme "போன்சி திட்டம்" vs Pyramid scheme
"பிரமிட் திட்டம்"
போன்சி திட்டம்(Ponzi scheme) vs பிரமிட் திட்டம் ( Pyramid scheme) |
போன்சி திட்டம் (Ponzi scheme) மற்றும் பிரமிட் திட்டம் (Pyramid scheme) இவ்விரு திட்டங்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக தோன்றினாலும் , போன்சி திட்டமும் பிரமிட் திட்டமும் வேறுவேறானவை ஆகும். ஒரு சில காரணிகள் மட்டுமே ஒரே மாதிரியானவையாக உள்ளது.
போன்சி
திட்டம்(Ponzi scheme)என்றால் என்ன?
போன்சி திட்டம்"Ponzi Scheme" என்பது ஒரு ஏமாற்று முதலீட்டுத் திட்டமாகும். ஒரு நிறுவனமோ, தனி நபரோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி அல்லது குறிப்பிட்ட காலத்தில் பல மடங்கு தொகை அசலுடன் சேர்த்து வழங்கப்படும் என்ற கவர்ச்சிகாரமான திட்டங்களை கூறி முதலீடுகளைப் பெற்றுக்கொள்வார்கள்.
இவர்கள் முதலீட்டாளர்களுக்கு தங்கள் இலாபத்திலிருந்து பணத்தை திரும்ப வழங்குவதற்கு பதிலாக புதிய முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்று அதில் குறிப்பிட்ட பகுதி தொகையை மட்டுமே முதலீட்டை திரும்ப கேட்கும் நபர்களுக்கு தருவார்கள்.
ஒரு கட்டத்தில் புதிய முதலீட்டாளர்களை சேர்க்க முடியாமல் போகும் போது அந்த நிறுவங்களிடமிருந்தோ அல்லது அதை சார்ந்த நபர்களிடமிருந்தோ முதலீட்டை திரும்ப பெறுவதில் ஏமாற்றமோ/சிக்கள் ஏற்படுகிறது .
1920ல் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சார்லஸ் போன்சி(Charles ponzi) என்பவர் தொடங்கிய தபால்தலை திட்டமே அமெரிக்காவிலும் ,சர்வதேச அளவிலும் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னாளில் முதலீடு சார்ந்த மோசடிகளுக்கு போன்சி என்று இவர் பெயரே அமையக் காரணமாகியது.
போன்சி திட்டத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக ஈமு கோழி முறைகேட்டைக் கூறலாம்.
பிரமிட் திட்டம் ( Pyramid scheme )என்றால் என்ன?
பிரமிட் திட்டம் "Pyramid scheme" ஒன்று அல்லது பல நபர்களின் கூட்டாகவோ ஒரு நிறுவனத்தின் பெயரில் முதலீடுகளைப் பெறுகின்றனர். புதிய நபர்களிடம் அல்லது முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற பணத்தில் குறிப்பிட்ட அளவே திருப்பி வழங்கப்படுகிறது , அதற்காக பிரமிட் போன்ற கூம்பு வடிவ அமைப்பை உருவாக்கி அதன் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. புதிய நபர்கள் இணையாத பட்சத்தில் அந்நிறுவனத்தின் திட்டம் முடிவுக்கு வந்துவிடும், அதேநேரத்தில் நிறுவனத்தில் இணைந்த நபருக்கு பணத்தைத் திருப்பித் தருவத்திலோ அல்லது வருமானம் வழங்குவதில் பிரச்சனை ஏற்படுகிறது.
இந்நிறுவனங்களில் சேர்பவர்களை முகவர்களாகவும், ஏஜெண்டுகளாகவும், விநியோகஸ்தர்களாவும் நியமித்து அவர்கள் மூலமாக பல கவர்ச்சித் திட்டங்கள் வாயிலாக புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமாக முன்பு சேர்ந்த நபர்களுக்கு வருமானம் வழங்கப்படுகிறது.
பிரமிட் திட்டங்கள்(pyramid scheme) சர்வதேச அளவில் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது, இந்தியாவிலும் பிரமிட் திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
பிரமிட் திட்டத்திற்கு எடுத்துக்காட்டாக
காந்த படுக்கை சார்ந்த நெட்வொர்க் மார்கெட்டிங் திட்டங்கள்
விளம்பரம் பார்ப்பது மூலமாக வருமானம் சார்ந்த நெட்வொர்க் மார்கெட்டிங் திட்டங்கள்
ஆடு, முயல், நண்டு வளர்ப்பு சார்ந்த நெட்வொர்க் மார்கெட்டிங் திட்டங்கள்
பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் வட்டி சார்ந்த நெட்வொர்க் மார்கெட்டிங் திட்டங்கள்
கிரிப்டோகிரான்சி மற்றும் பிட்காயின் சார்ந்த நெட்வொர்க் மார்கெட்டிங் திட்டங்கள்
போன்ற திட்டங்களை நெட்வொர்க் மார்கெட்டிங் திட்டத்துடன் சேர்ந்து நடைபெறும் முறைகேட்டைக் கூறலாம்.
பிரமிட் திட்டங்களின் ( Pyramid scheme ) சில நடவடிக்கைகள் :
- குறுகிய காலத்தில் அதிக வருமானம் என்ற பொய்யான உறுதி மொழிகள்.
- தரமான பொருளோ அல்லது சேவையோ இருப்பதில்லை.
-
பொருளுக்காக இல்லை, இது வருமானத்துக்கான திட்டம் என்ற தவறான வலியுறுத்தல்.
-
சில்லறை வணிகம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்காது.
-
இணைந்தால் போதும் சுலபமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகள் கூறுதல்.
வருமான திட்டத்தைப் பற்றி தெளிவான விளக்கம் இல்லாமல் இருப்பது.
போன்சி திட்டத்தால் விரைவாக பணக்காரராக முடியுமா ?
இல்லை , போன்சி திட்டத்தில் ( Ponzi scheme ) இயல்பு நிலைக்கு மாறாக அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசை உருவாக்கி தொடர்சியாக புதிய நபர்கள் இணைவதால் மட்டுமே பணம் வழங்குவதால், ஒரு கட்டத்தில் இதுவும் நின்றுவிடுகிறது.
பிரமிட் திட்டத்தால் விரைவாக பணக்காரராக முடியுமா?
இல்லை , பிரமிட் திட்டத்தில் ( Pyramid scheme ) மேல்நிலையில் உள்ள ஒரு சிலரே அதிக பணம் பெறுவர் அதனால் அத்திட்டத்தில் இணையும் அனைவரும் பணக்காரராக முடியுது மற்றும் புதிய நபர்களையும் தொடர்ந்து சேர்க்க முடியாமல் ஒரு கட்டத்தில் நின்றுவிடும்.
போன்சி திட்டம் மற்றும் பிரமிட் திட்டம் சார்ந்த நிறுவனம் தொடர்ந்து செயல்படுமா ?
இல்லை , புதிய நபர்கள் இணையாத பட்சத்தில் இத்திட்டம் சார்ந்த நிறுவனம் தோல்வி அடைகிறது.
1 comment
Best Network marketing pls Cal 8220037400