போன்சி திட்ட மோசடி  (Ponzi scam): அக்ரி கோல்ட்(Agri Gold scam)  

 

Ponzi scam
 Ponzi scam: Agri Gold scam(அக்ரி கோல்ட்)


 

    

    23-12-2020: ரூ :6380 கோடி மதிப்புள்ள போன்சி திட்ட மோசடியில் ஈடுபட்டதாக போன்சி திட்ட மோசடி  (Ponzi scam) அக்ரி கோல்ட்(Agri Gold scam)  குழும நிறுவனத்தின் மூன்று விளம்பரதாரர்களை (Promoters) அமலாக்க இயக்குநரகம்;(Enforcemnt Directorate)  கைது செய்ததாக தெரிவித்துள்ளது

 

    அக்ரி கோல்ட்(Agri Gold)  குழும நிறுவனத்தின் மூன்று விளம்பரதாரர்கள் அவ்வா வெங்கட்ட ராமராவ் , அவ்வா வெங்கட்ட சேசு நாராயண ராவ், அவ்வா ஹேமா சுந்தர வரா பிரசாத் ஆகிய மூவரும் முதன்மை குற்றவாளிகளாக கண்டறிந்து , பண மோசடி தடுப்புச் சட்டத்தின்;(Prevention of Money Laundering Act(PMLA)) கீழ் கைது செய்து ஹைராபாத் பி.எம்.பி.எல்(PMLA)  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மூவருக்கும் 14நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளதாக அமலாக்க இயக்குநரகம் (E.D) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது .

 

  

  ஆந்திரா, தெலுங்கான, கர்நாடக, தமிழ்நாடு, மேலும் சில மாநிலங்களிருந்தும் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து வைப்புத்தொகை பெற்றுள்ளனர் மற்றும் வைப்புத்தொகை செலுத்தியவர்களுக்கு  உரிய நிலங்களை எந்த செயலையும் செய்யவில்லை என்றும்,ஆந்திரா, தெலுங்கான, கர்நாடகவில் பதிவான எப்..ஆர் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று .டி (E.D) கூறியுள்ளனர்.

 

   

   இந்நிறுவனங்களின் திட்டங்களுக்காக பொது மக்களிடமிருந்து வைப்புத்தொகை பெறுவதற்கான அனுமதியை ஆர்.பி. யிடமிருந்து பெறவில்லை என்பதும் கண்டறிந்துள்ளது. இந்திய பத்திர பரிவர்த்தனை வாரியம் செபி(SEBI)  " இந்நிறுவனத்திடம் பொது மக்களிடமிருந்து வைப்புத்தொகை பெறுவதை நிறுத்துமாறும், பெற்ற பணத்தை திருப்பித் தருமாறும் அறிவுறுத்தியதை கண்டுக்கொள்ளாமல் புதிய நிறுவங்களின் பெயரில் வைப்புத்தொகை பெற்றுவந்துள்ளனர்", இதனால் ஒரு போன்சி  மோசடி என்று .டி (E.D)கூறினார்.

 

 

 

No comments