Top 10 Best Network Marketing Companies in India 2021 ( இந்தியாவின் சிறந்த 10 நேரடி விற்பனை நிறுவனங்கள் )
Top 10 Network Marketing in India |
நேரடி விற்பனை வியாபாரத்தை, நெட்வொர்க் மார்க்கெட்டிங்(Network Marketing) மற்றும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) என்றும் அழைக்கப்படுகிறது. நெட்வொர்க் மார்க்கெட்டிங் உலக அளவில் 50 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்தியாவில் உலகளாவிய பொருளாதாரக் கொள்கை நடைமுறை படுத்தப்பட்டதிலிருந்து செயல்படுகிறது. ஆனால் இது சார்ந்த நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பல நிலைகளில் மாற்றம் பெற்றுள்ளது.
நீங்கள் 2021 இந்தியாவின் சிறந்த 10 நேரடி விற்பனை நிறுவனங்களை ( Top 10 Best Network Marketing Companies in India 2021) தெரிந்து கொள்வதில் உங்களுக்கு சிரமமென்றால் நாங்கள் அதற்கு உதவியாக இருக்க இந்த பதிவிட்டு உள்ளோம். இதன் மூலம் நாங்கள் எந்த ஒரு நிறுவனத்தையும் பிரபலமாக்கவோ அல்லது ஊக்கப்படுத்தவோ அல்ல, நாங்கள் பல வலைதளங்களிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சிறந்த நேரடி வியாபார (Direct Selling) நிறுவனங்களின் பட்டியலை ஒருங்கிணைந்துள்ளோம்.
நேரடி விற்பனை நிறுவனங்களின் இரண்டு முதன்மை நோக்கம்:
👉 நிறுவனங்களின் உள்ள பொருட்களை விற்க விருப்பும் நபர்கள் மூலம் பெரிய மக்கள் தொடர்பு வலையமைப்பை உருவாக்குதல்.
👉 நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்க செய்வது.
நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் சிறப்பாக செயல்பட முக்கியமான தகுதி மக்கள் செல்வாக்கு அதாவது அதிக மக்கள் தொடர்பு கொண்டிருப்பது, நீங்கள் மக்கள் செல்வாக்கு பெற்றவராயின் நெட்வொர்க் மார்க்கெட்டிங் சிறந்து விளங்க முடியும், இல்லையெனில நீங்கள் அதை உருவாக்க வேண்டும்.
நெட்வொர்க் மார்க்கெட்டிங் நீங்கள் எவ்வாறு வருமானம் பெறவது:
நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தின் பொருட்களை உங்களுடைய தொடர்பில் உள்ளவர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் விற்பனை செய்வதின் மூலமும்,
நிறுவனத்தின் பொருட்களை விற்க நீங்கள் சார்ந்த நிறுவனத்தில் உங்களுக்கு கீழ் அதிக நபர்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும் வருமானம் பெறலாம்.
உதாரணமாக நீங்கள் இருவர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை விற்பனை நபராக சேர்க்க, அவர்கள் இருவரும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை சேர்க்க, உங்கள் குழுவுடன் இந்த ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களும் செய்யும் அனைத்து விற்பனைக்கும் குறிய கமிஷன் உங்களுக்கும் வழங்கப்படும்.
நீங்கள் நெட்வொர்க் அல்லது எம்.எல.எம்(MLM)ல் அதிக வருமானம் பெற உங்களின் விற்பனை திறனையும் மட்டுமல்ல, உங்கள் குழுவில் உள்ளவர்களின் விற்பனை திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட நேரடி விற்பனை வியாபார நிறுவனங்கள், நுகர்வோர் விவகாரங்கள் ( Consumer Affairs) அமைச்சகத்தில் பதிவு செய்துள்ளது. இதில் நிறுவனத்தின் விற்பனை அளவு, விநியோகஸ்தர்கள் ( Distributor) அளவு , நிறுவனத்தின் செயல்பாடுகள் மேலும் சில அடிப்படை தரவுகளை பல வலைப்பதிவுகளில் இருந்து பெற்று அதன் அடிப்படையில் கீழே உள்ள பட்டியல் தரப்பட்டுள்ளது.
இந்தியாவின் சிறந்த 10 நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் ( Top 10 Network Marketing Companies in India):
1.மை லைஃப் ஸ்டைல் மார்க்கெட்டிங் (Mi lifestyle Marketing)
2.ஆம்வே (Amway)
3.ஹெர்பா லைஃப் (Herbalife)
4.ஃபார் எவர் லிவிங் ( Forever Living)
5.வெஸ்டீஜ் (Vestige)
6. சேப்சாப் (Safeshop)
7.மோடிகேர் (Modicare)
8.ஓரிஃபிளேம்( Oriflame)
9.அவோன் (Avon)
10.ஓரியன்ஸ் (Oriens)
மேலே குறிப்பிட்ட 10 நிறுவனங்கள் இந்தியா அளவில் பெறப்பட்ட தரவுகள், ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இதில் சில நிறுவனங்கள் குறைந்த விற்பனை பிரதிநிதிகளையே கொண்டுள்ளது.
தமிழ்நாட்டை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இரண்டு நிறுவனங்கள் டாப் 10 (Top 10) இடங்களில் இடம் பெற்றுள்ளன.
1.மை லைஃப் ஸ்டைல் மார்க்கெட்டிங் (Mi lifestyle Marketing)
2.ஓரியன்ஸ்( Oriens)
இவ்விரு நிறுவனங்களும் பல வெளிநாடுகளிலும் தங்கள் நிறுவன அலுவலகங்களைக் கொண்டு செயல்படுகிறது.
1 comment
Socio Labs, being the best performance marketing company in India will offer trends and most importantly some key elemental digital solutions that will keep your social media thriving with new leads and sales.