நெட்ஒர்க் மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடகம் (NETWORK MARKETING AND SOCIAL MEDIA)
Direct Selling through Social Media
உங்கள் குழுவினர் எந்த அளவுக்கு உச்சாகமாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கே நெட்ஒர்க் மார்க்கெட்டிங்ல் நீங்கள் வருமானம் பெற முடியும். அதற்காக தேவையில்லாமல் வருமானத்திற்கு மிஞ்சிய செலவும் செய்தல் கூடாது.
சமூக ஊடகம் (SOCIAL MEDIA)
காலை எழுந்ததிலிருந்து உறங்கும் வரை சமூக ஊடகதத்தை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம், அதனால் சமூக ஊடகம் ஃபேஸ்புக் (FACEBOOK), இன்ஸ்டாக்ராம் (INSTAGRAM), கூகிள் மீட்(GOOGLE MEET), ஜும் மீட்(ZOOM MEET) போன்ற சமூக ஊடகத்தை சரியாக பயன்படுத்தினால் வெற்றியடைய இலகுவாக இருக்கும்.
ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம் போன்றவற்றில் உங்கள் அணியினரின் சாதனைகளை அவரின் புகைப்படத்துடன் கூடிய போஸ்ட்டர்(POSTER) உருவாக்கி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ள உங்கள் குழுவில் பகிர்ந்து கொள்ளும்போது அவர்களுக்கு ஊக்கத்தை உருவாக்கும்.
👍உங்கள் அணியினரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் புகைப்படத் தொகுப்பை(PHOTO COLLECTIONS) உங்கள் சமூக ஊடகக் குழுவில் பகிர்ந்து கொள்ளலாம்.
👍நிறுவனத்தின் கொண்டாட்டம் மற்றும் புதிய திட்டத்திற்கான அழைப்பிதழ்களை பகிர்ந்து புதிய நபர்கள் உங்கள் வணிகத்தில் இணையும் ஆர்வத்தை உருவாக்க உதவியாக இருக்கும்.
👍சமூக ஊடகத்திலுள்ள உங்கள் குழுவில் உள்ள அணியினருக்கு ஊக்கம் தரும் விதமாக தினம் ஒரு வாக்கியத்தை பதிவிடலாம், அதை படிக்கும் அனைவருக்கும் உத்வேகத்தை தரும்.
👍உங்களின் ஒரு வருட சாதனைகளின் தொகுப்பை புகைப்படமாக பதிவிடும் போது அதை பார்ப்பவர்களுக்கு உங்களின் வணிகத்தில் அவர்களுக்கு ஆர்வத்தை உருவாக்கும்.
👍உங்கள் அணிக்குள்ளே சிறு சிறு இலக்குகளை உருவாக்கி அதை அடைய அவர்களுக்கு ஊக்கப்படுத்துங்கள், அடைந்த பின் அணியினர் முன் அங்கீகாரம் வழங்குங்கள்.
No comments