இந்தியா அரசின் நேரடி வியாபாரத்திற்கான வழிமுறைகள் 2016( Indian govt Guideline for Direct Selling 2016)
Indian govt Guideline for Direct Selling |
இந்தியாவில் நேரடி வியாபாரம் / நெட்வொர்க் மார்கெட்டிங் (Direct selling / Network Marketing) செய்ய அனுமதி இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் ஏதும் இல்லாததால் சில நிறுவனங்கள் அதனைப் பயன்படுத்தி மக்களின் பணத்தையும், உழைப்பையும் உறிஞ்சிக்கொண்டன .
இதைக் கண்டறிந்து 2012-ல் பல மாநிலங்களில் இம்முறை வியாபாரத்திற்கு அம்மாநில அரசுகள் தடை விதித்தது. இதனால் சரியான முறையில் இயங்கிய நிறுவனங்களும், விநியோகிஸ்தர்களும் FDSA and IDSA அமைப்புகளுடன் இணைந்து மத்திய அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
மத்திய அரசு பலமுறை ஆராய்ந்து நுகர்வோர் விவகார அமைச்சகம்(Consumer affairs ministry)கீழ் நேரடி வியாபாரம் / நெட்வொர்க் மார்க்கெட்டிங்கான சட்டம் மற்றும் அதற்கான வழிமுறைகளும் 9-செம்படம்பர்-2016 ல் உறுதிசெய்யப்பட்டு, 26-அக்டோபர்-2016 அன்று மத்திய அரசிதழ் (The Gazette of India) வெளியிடப்பட்டுள்ளது.
No comments