நெட்ஒர்க் மார்க்கெட்டிங் மற்றும்
நேரடி விற்பனை வணிகத்தில் வெற்றிக்கானதடைகள் (Secret Success in network marketing and direct selling )
Secret Success of Direct Selling |
ஒவ்வொரு நபரும் ( நீங்களும் ) நெட்ஒர்க் மார்க்கெட்டிங் மற்றும் நேரடி விற்பனை வணிகத்தின் முதல் அடி எடுத்து வைக்கும் போது பெரிய இலக்கை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இணைகிறோம் , ஆனால் குறுகிய காலத்தில் உங்களுக்குள் சில தடைகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்கள் வெற்றியை பாதிப்பதும் இந்த தடைகளே , பெரும்பாலோர் இம்மாதிரியான வணிகத்தில் தோல்வியடைவதற்கான காரணிகளும் இவைகளே , வெற்றியடைய தடைக்கான காரணிகள்.
1. பயம் ( Fear )
2. சோம்பறித்தனம் ( Laziness )
3. கெட்ட பழக்க வழக்கம் ( Bad Habits )
4. குற்றங்களையே காணுதல் ( Cynicism )
5. தள்ளிப்போடுதல் ( Postponement )
6. அகந்தை அல்லது அகங்காரம் ( Arrogance )
இதை உங்களுக்குள்ளும் , உங்கள் குழுவிலும் உள்ளவர்களிடமும் உடைத்தெறிந்தால் நீங்களும் உங்கள் குழுவிலும் வெற்றியாளர்களே.
1. பயம் (Fear):
நாம் ஒவ்வொருவரும் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் மற்றும் இலட்சியங்களை அடைய வேண்டும் என்ற துடிப்புடன் தான் ஒவ்வொரு செயல்களையும் துவங்குகிறோம். அதேபோல தான் சாதித்தவர்களும் செய்து வெற்றி பெற்றார்கள். இலக்கை அடைந்தவருக்கும் , அந்த நிலையை அடைய முடியாமல் போனவர்க்கும் உள்ள முக்கிய வேறுபாடு பயம் (Fear) , ஆம் யார் ஒருவர் மற்றவரை சந்திக்கவோ அல்லது தான் செய்யும் செயலையோ(நெட்வொர்க் மார்க்கெட்டிங்) மற்றவர்களிடம் சொல்ல தயங்குவது அல்லது பயப்படுவது, மற்றவர்கள் நம்மை என்ன சொல்வார்களோ என்ற எண்ணமே நம்மை பின்னோக்கி செல்ல காரணமாகிறது. வெற்றியாளர்களை ஆரம்பத்தில் இந்த உலகம் அவர்களை ஊக்கப்படுத்தியதோ அல்லது பாராட்டியதோ உண்டா என்று சிந்தித்து பாருங்கள்.......
பதில்:. இல்லை
இந்த உலகம் வெற்றி பெற்ற பின்னரே கொண்டாடியுள்ளது. ஆம் நீங்கள் வெற்றி பெற்றால் உங்களையும் இந்த உலகம் கொண்டாடும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, வெற்றியாளர்களைப் போல் நீங்களும் உங்கள் இலட்சியத்தில் மட்டும் கவனம் வைத்து தொடந்து செயல்பாடுவதே ஆகும்.
2.சோம்பேறித்தனம்(Laziness):
வெற்றியாளர்கள் எப்போதுமே நேரம் பார்க்காமல் இலட்சியத்தை அடையும் வரை உழைத்துக் கொண்டே இருப்பார்கள். பெரும்பாலானவர்கள் உழைப்பதற்கு பதிலாக வருங்காலத்தைப் பற்றிய கனவிலும் மற்றும் உழைக்காமல் இலட்சியத்தை அடைய குறுக்கு வழிகளைத் தேடி காலத்தை வீணாக்கிக் கொண்டிருப்பார்கள்.
உதாரணமாக நேரடி விற்பனை வியாபாரத்தில் வாடிக்கையாளரை சந்திப்பதற்கான பட்டியலை தாயரித்த பின்னும் நாளை , நாளை மறுநாள் சந்திக்கலாம் என்று காலம் நடத்துவர். இன்னும் சில நபர்கள் தன் குழு உறுப்பினரை சந்திக்க அனுப்பி வைத்த பின் வீட்டிலிருந்து கொண்டு காலத்தையும், வாய்ப்புகளையும் வீணாக்குகிறார்கள்.
நீங்கள் அவ்வாறில்லாமல் தொடர்ச்சியாக செயல்பட்டு, உங்கள் குழுவையும் தொடர்ச்சியாக செயல்பட வைத்தால் வெற்றி நிச்சயம்.....
இதை படிக்க: குழுவுக்கு நீங்கள் செய்யும் பணிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.
No comments