ராபர்ட் டி கியோசகியும் பணப் பாய்வு நான்கு காரணிகளும் (Robert T Kiyosaki Cashflow Quadrant)

ராபர்ட் டி கியோசகி பணப் பாய்வு

Robert T Kiyosaki Cashflow Quadrant

  

    

உலகில் உள்ள மனிதர்களின் வருமானத்தை மேலே உள்ள படத்தின் மூலம் நான்கு அடிப்படைக் காரணிகளாக் கொண்டு விளக்கியுள்ளார் , அதன் அடிப்படையிலேயே ஒருவர் தன் வாழ்க்கைத் தரத்தை  நிர்ணயித்துக் கொள்கின்றார்கள். ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து வருமானம் (Active Income)பெற வேண்டுமா? அல்லது தன் இளமையில் உழைத்து  காலத்துக்கும் அறுவடை செய் என்பதற்கு ஏற்ப வருமானம் (Passive Income)பெற  வேண்டுமா? என்பதை  நாம் செய்யும் வேலையைப் பொருத்தே முடிவு செய்யலாம்.


தொழிலாளி (E - Employee):

Robert T Kiyosaki Cashflow Quadrant
Employee

    காலம் காலமாக நமக்கு செல்லி வளர்த்து வந்ததும் இதுதான் நல்ல பாடுச்சாத்தான் நல்ல வேலைக்குப் போக முடியும் நல்ல வாழ்க்கை வாழ முடியும். காலங்கள் மாறினாலும் இதிலிருந்து மாறுவதற்கு இன்றும் சில தயக்கம் இருக்கத்தான் செய்கிறது , இதில் தொழிலாளி (E - Employee)ஒருவருடைய வாழ்கைத் தரமானது(Quality of Life) அவர் வேலையிலிருந்து பெறும் வருமானத்தைப்(Income) பொறுத்தே அமைகிறது. இதனால் சிலர் தங்கள் தரத்தை உயர்த்த குறுக்கு வழிகளையும் கையாள்கிறர்கள்.

 

   ராபர்ட் டி கியோசகின்(Robert T Kiyosaki)கூற்றுப்படி ஒருவர் தான்  (குறைவாகவோ அல்லது அதிகமாகவோ) பெறும் வருமானத்தில் குறிப்பிட்ட அளவு வரியாகவும்(Tax) மற்றும் இதர செலவுகளுக்கும்(Expense) பயன்படுத்துகின்றனர். இதனால் ஒருவர் தன் வாழ்நாளில் செய்யும் வேலையைப் பொருத்து குறிப்பிட்ட இலக்கை மட்டுமே

அடையமுடிகிறது என்கிறார்.


சுய தொழில் (S- Self Employment and Professional):

  
Robert T Kiyosaki Cashflow Quadrant
Self Employee

        சுய தொழில் மற்றும் புரஃபெஷனல்(S- Self Employment and Professional) என்பவர் தனக்குள் இருக்கும் தனித் திறமையை(Talents) வைத்தோ அல்லது புதுமையான சிலவற்றை செய்வதன் முலமாக வருமானம்(Income) ஈட்ட முடிகிறது. இங்கு ஒருவர் தன் உழைப்பைப் அவர் ஈடுபட்டுள்ள சுய தொழிலில்(Self Employment) பயன்படுத்தும் வரை மட்டுமே வருமானம் பெறலாம் அல்லது அவர் தன் வருமானத்திலிருந்து ஏதேனும் சேமித்தோ(Savings) , சொத்தோ (Asset) வைத்திருக்கும் பட்சத்தில் அதிலிருந்து வருமானம்(Income) பெறமுடியும்.

   

    தொழிலாளி (E - Employee) மற்றும் சுய தொழில் (S- Self Employment) இவ்விரு முறைகளிலும் ஒருவர் தன் உழைப்பில் 95% கொடுத்தே (Acitve Income)வருமானத்தைப் பெற முடிகிறது.

 

தொழில் (B- Business):

 

Robert T Kiyosaki Cashflow Quadrant
Business man

       தொழில் (B- Business) என்பது ஒரு பொருளோ (Product), சேவையோ (Service), தன் கண்டிபிடிப்போ (Invention or Discovery), அல்லது கருத்துக்களை(Idea) விற்பனை செய்வதின் மூலமாக வரும் வருவாயில் குறிப்பிட்ட இலாபத்தை(Profit) வருமானமாகப்  பெறுகிறார்கள். இதில் தான்  செய்யும் தொழிலைப் பொருத்து அவருடை வளர்ச்சியும்  அமைகிறது.

 

முதலீட்டாளர் (Investor):

Robert T Kiyosaki Cashflow Quadrant
Investor

முதலீட்டாளர் (Investor) தன்னிடம் உள்ள பணத்தையோ, தொழில் நுட்பத்தையோ மற்றோருவர் செய்யும் தொழிலில் முதலீடாக செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார். இங்கு இவர் ஒரு முறை செய்த உழைப்பு அவருக்கு பல காலங்களுக்கு வருவாய் தருகிறது.

 

     தொழில் (B- Business) மற்றும் முதலீட்டாளர் (Investor) இவ்விரண்டிலும் தன் 5% உழைப்பும், 95% அறிவைப் பயன்படுத்தி (Passive Income) வருவாய் பெறுகிறார்கள்.


Active Income: ஒருவர் தன்  உழைப்பைக் கொடுத்து மட்டுமே பெறும் வருமானம் Active Income ஆகும்.
Passive Income: ஒருவர் தன் வாழ்வில் ஒரு முறை செய்த செயலுக்கு பல காலங்களுக்கு அவரின் உழைப்பின்றி பெறும் வருமானம் Passive Income ஆகும்.

    இன்றைய காலத்தில் முதல் தலைமுறை(First Generation) முதலீடடாளர் மேலே பார்த்த நான்கு நிலைகளை கடந்தே வந்துள்ளனர். ஆனால் இரண்டாம் தலைமுறை அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் (Second Generation and More)தங்கள் முன்னோர்கள் வைத்திருந்த சொத்துக்கள் மற்றும் பணத்தை வைத்தோ மற்றவரின் உதவியுடனும் முதலீடடாளர்களாக  வளர்த்ததையும் பார்க்க முடியும். 


     ஒவ்வொருவரும் நம் வாழ்நாளில் ஆக்டிவ்(Active Income வருமானத்துடன் சேர்த்து சிறிது நேரம் ஒதுக்கி பேசிவ் வருமானத்துக்கு(Passive Income) உழைப்பை அளித்தால் எல்லோராலும் பேசிவ் வருமானத்துக்கான(Passive Income) இலக்கை அடைய முடியும். 

No comments