இந்தியாவில் கிரிப்டோகரன்சி (Cryptocurrency in india) - பிட்காயின்(Bitcoin):
Cryptocurrency in india-Bitcoin |
கரன்சி என்பது பணம் இது நாட்டுக்கு நாடு மாறுபடும், இந்த படத்திற்கு மாற்றாக உருவாக்கியது கிரப்டோகரன்சி ஆகும். கிரிப்டோகரன்சி (cryptocurrency) என்பது கண்ணால் பார்க்க முடியாத மெய்நிகர்(virtual currency)நாணயம் ஆகும். இது முழுவதும் இணையம் சார்ந்த பரிவர்த்தனையாக உள்ளது மற்றும் இதற்கு என்று மையப்படுத்தப்பட்ட (Centralized) கட்டமைப்புக்கள் ஏதுமில்லை, பரவலாக்கப்பட்ட (Decentralized)முறைகளில் பிளாக்செயின்(Blockchain) தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.
ஜப்பானை சார்ந்த சத்தோசி நாகமோட்டோவால் உருவாக்கப்பட்டது என்று கூறினாலும், இதை கண்டுபிடித்தவர்கள் இன்னும் யார் என்று தெரியவில்லை.
உலக நாடுகளில்
எந்த ஒரு நாட்டின் அரசாங்கமும் இதை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதால் இதற்கான வரையறைகளை (Regulation) உருவாக்குவதில் சிக்கல் நீடிக்கிறது .
கிரிப்டோகரன்சியில்(cryptocurrency) ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெய்நிகர் (Virtual Currency)நாணயங்கள்
உள்ளன. அவற்றுள்
Bitcoin(BTC), Ripple(XRP),
Ethereum(ETH), Tether(USDT), EOS, XRP, Polkadot(DOT),
Chainlink(LINK), Crypto.com coin(CRO), Litecoin(LTC) மிகவும் அதிகமாக யன்படுத்தப்படுகிறது.
கிரிப்டோகரன்சி தடை:
இந்தியாவில் ஏப்ரல் 6 2018ல் ரிசர்வ் வங்கி நாணய கொள்கை வெளியிட்டது அதில் பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி சார்ந்த மெய்நிகர்(VirtualCurrency) நாணயம் தடைசெய்தது.
ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் வங்கிகள் மற்றும் பணபரிமாற்ற நிறுவனங்கள் மெய்நிகர்(Virtual Currency)நாணயங்களை வாங்கவோ விற்கவோ அனுமதிக்க கூடாது என்றும் , அதை சார்ந்த நிறுவனங்களுடன் எந்த உறவும் வைக்கக்கூடாது என்றும் அறிவுருத்தியுள்ளது. இதனால் அனுமதி பெறாமல் இயங்கிய நிறுவனங்கள் தனது பரிவர்த்தனைகளை நிறுத்திக்கொண்டது.
தடை நீக்கம்:
ரிசர்வ் வங்கியின் தடையைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது , இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மார்ச் 04 2020ல் ரிசர்வ் வங்கி விதித்த தடையை நீக்குவதாக தீர்ப்பளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியும் கிரிப்டோகரன்சியும்:
22
ஜீலை 2022-ல் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை படிப்படியாக அறிமுகப்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதால் , நாட்டின் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் அந்நிய செலாவணி விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அதன் துணை ஆளுநர் டி. ரபி சங்கர் தெரிவித்துள்ளார்.
பணத்திற்கு பாதுகாப்பு :
கிரிப்டோகரன்சி சார்ந்த மெய்நிகர்(Virtual Currency)நாணயங்களுக்கு சரியான கட்டமைப்புகள் இல்லாததால் அதில் ஈடுபடும் நபர்களின் பணத்திற்கு எந்தவித உத்தரவாதமில்லை அதனால் நீங்கள் உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
சில கிரிப்டோகரன்சி (Crypto Currency) சார்ந்த நிறுவனங்கள் நேரடி வியாபாரம்/ நெட்வொர்க் மார்க்கெட்டிங் சார்ந்த வியாபரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் கிரிப்டோகரன்சி சார்ந்த நேரடி வியாபாரம் / நெட்வொர்க் மார்க்கெட்டிங்(Directselling/Network marketing) செய்ய அனுமதி வழங்கவில்லை , இதனால் நீங்கள் இவ்வகை வியாபாரத்தில் ஈடுபட்டால் உங்கள் பணத்திற்கு எந்தவித பாதுகாப்புமில்லை.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி (Crypto Currency) க்கான வரையறைகள்
இல்லாததால் தற்சமயம் யூகம் சார்ந்தே அதிகமாக ஈடுபடுகின்றனர் அதனால் சாதாரண மனிதர்கள் இதில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
நெட்வொர்க் மார்க்கெட்டிங் பிட்காயின் திட்டம்(Network Marketing and Bitcoin) :
இந்தியாவில் பல நிறுவனங்கள் பிட்காயின்(Bitcoin) பயன்படுத்தி நெட்வொர்க் மார்க்கெட்டிங்(Network
marketing) தொழிலில் குறிப்பாக பிரமிட்(Pyramid) மற்றும் போன்சி(Ponzi) போன்ற திட்டங்களில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளது. பிரமிட்
திட்டங்களில் குறிப்பிட்ட தொகையை வசூலித்துக்கொண்டு ஆட்களை சேர்ப்பதன் மூலம் கமிஷன் வழங்குவது மற்றும் போன்சி திட்டங்களில் குறிப்பிட்ட தொகையை வசூலித்துக்கொண்டு அதிலிருந்து சிறு தொகையை தனக்கு மேலேயுள்ள தன்னை அறிமுகப்படுத்திய நபருக்கு வழங்குவது .
இதுபோன்ற திட்டங்களில் நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் உங்களுடைய பணத்தை பாதுகாத்துக் கொள்வீர்கள் .
பிட்காயின் குறைபாடுகள் :
-
பிட்காயின் மதிப்பு நிலைத்து நிற்பதில்லை .
-
பிட்காயினை எந்தவொரு வங்கியும் கட்டுப்படுத்துவதில்லை .
- பிட்காயின் சுரங்கம்(bitcoin minor) மூலம் இணைக்கப்படுகிறது . இந்த சுரங்கம் (minor)எல்லோராலும் அமைக்க முடியும். அதற்கு தேவையான கணினி மற்றும் தொழில்நுட்பங்கள் , தடையில்லா மின்சாரம் இருந்தால் போதுமானது. சுரங்கம்(minor) பாதிப்புக்கு உள்ளாகும் போது பிட்காயினும் பாதிப்படையலாம்.
No comments